3587 | வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல் போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1) |
|