3598மாயக் கூத்தா வாமனா
      வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
      சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
      தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே
      ஒருநாள் காண வாராயே             (1)