3600முடிசேர் சென்னி அம்மா நின்
      மொய் பூம் தாமத் தண் துழாய்க்
கடிசேர் கண்ணிப் பெருமானே
      என்று என்று ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
      பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர்
      தூ நீர் முகில் போல் தோன்றாயே.            (3)