3602சொல்ல மாட்டேன் அடியேன் உன்
      துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு
      இரண்டுபோல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
      உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
      மா நீர்க் கொண்டல் வண்ணனே?             (5)