3603கொண்டல் வண்ணா குடக்கூத்தா
      வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை
      ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண்மேல் தான்
      விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல்காண
      ஒருநாள் வந்து தோன்றாயே             (6)