3605ஒக்கும் அம்மான் உருவம் என்று
      உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள்
      காணும்தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று
      ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்
புக்க நல்தேர்த் தனிப்பாகா
      வாராய் இதுவோ பொருத்தமே?             (8)