3607பிறந்த மாயா பாரதம்
      பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண்
      பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
      இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா
      உன்னை எங்கே காண்கேனே?             (10)