3611ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப் பிரானே             (3)