362உரக மெல் அணையான் கையில் உறை
      சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
      கமல வயற் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டு அழை
      யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
      பாவம் செய்தன தாம் கொலோ             (4)