3621இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே             (2)