3624திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே?             (5)