3625பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே?             (6)