3632அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
      அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
      படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
      இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
      உணர்வில் உம்பர் ஒருவனே             (2)