3637அதுவே வீடு வீடுபேற்று
      இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
      யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று
      இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
      எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே             (7)