3639கூடிற்றாகில் நல் உறைப்பு
      கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம்
      மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே
      எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
      உளரும் இல்லை அல்லரே             (9)