3643அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி
      மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும்
      பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான்
      உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர்
      புகழும் இவளே             (2)