3644புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
      கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப
      செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
      அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
      திருப்புலியூர் வளமே             (3)