3645ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
      பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
      நாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
      தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள்
      இன்று இப் புனை இழையே             (4)