3646புனை இழைகள் அணிவும் ஆடை உடையும்
      புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று
      நினைக்கப்புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும்
      தண் திருப்புலியூர்
முனைவன் மூவுலகு ஆளி அப்பன்
      திரு அருள் மூழ்கினளே.             (5)