3648மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க
      வீங்கு இளம் தாள் கமுகின்
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து
      மணம் கமழ்ந்து
புல் இலைத் தெங்கினூடு கால் உலவும்
      தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
      இம் மடவரலே             (7)