3649மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்?
      மல்லைச் செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல்
      வான் புகை போய்த்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
      தண் திருப்புலியூர்
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால்
      பரவாள் இவளே             (8)