365குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று
      கூடி ஆடி விழாச் செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல்
      ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்
கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்
      கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
      எத்தவங்கள் செய்தார் கொலோ             (7)