3651அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்
      தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக்
      குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட
      நாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
      இவள் நேர்பட்டதே?             (10)