3655உறுமோ பாவியேனுக்கு இவ்
      உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
      செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
      ஆண்டார் இங்கே திரியவே?             (3)