3657வழிபட்டு ஓட அருள் பெற்று
      மாயன் கோல மலர் அடிக்கீழ்ச்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
      வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில்
      பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம்
      நுகர்ச்சி உறுமோ முழுதுமே?            (5)