3659தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
      நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
      உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
      நாளும் வாய்க்க நங்கட்கே             (7)