366நளிர்ந்த சீலன் நயாசலன் அபி
      மான துங்கனை நாள்தொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட
      செங்கண் மால் திருக்கோட்டியூர்க்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்
      பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர்
      மீது கொள்ளகிலார்களே             (8)