3660நாளும் வாய்க்க நங்கட்கு
      நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
      சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங் கற்பகக்
      காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல்
      கிடந்தான் தமர்கள் கூட்டமே.            (8)