3662வாய்க்க தமியேற்கு ஊழிதோறு
      ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள்
      பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம்
      அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச்
      செல்லும் நல்ல கோட்பாடே             (10)