368காசின் வாய்க் கரம் விற்கிலும் கர
      வாது மாற்று இலி சோறு இட்டுத்
தேச வார்த்தை படைக்கும் வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்
கேசவா புருடோத்தமா கிளர்
      சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்தம்மை
      விற்கவும் பெறுவார்களே             (10)