3683 | வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தைப் பருக சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனைத் திருப்புளிங்குடியாய் கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடுவினைப் படைகள் வல்லானே (9) |
|