369சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்
ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே             (11)