3738பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே             (9)