375அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி
      ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்
      பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி
      மாயனை மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம்
      சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே             (6)