3751வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே             (11)