3756 | யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ யாமுடைத் துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்? அவனுடை அருள்பெறும் போது அரிதே (5) |
|