3757 | அவனுடை அருள்பெறும் போது அரிதால் அவ் அருள் அல்லன அருளும் அல்ல அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் எவன் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ? ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் (6) |
|