3758 | ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப் புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ (7) |
|