376தென்னவன் தமர் செப்பம் இலாதார்
      சே அதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப்
      பின் முன் ஆக இழுப்பதன் முன்னம்
இன்னவன் இனையான் என்று சொல்லி
      எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார்
      வானகத்து மன்றாடிகள் தாமே             (7)