377கூடிக் கூடி உற்றார்கள் இருந்து
      குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு
      நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம்
      கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால்
      குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே             (8)