3771பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே             (9)