379 | செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல் பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன் சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10) |
|