முகப்பு
தொடக்கம்
3790
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)