முகப்பு
தொடக்கம்
3793
நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9)