3794மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே             (10)