3796 | வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா (1) |
|