3799 | தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் (4) |
|