3800 | பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ மணி மிகு மார்பினில் முல்லைப்போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து அணி மிகு தாமரைக் கையை அந்தோ! அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5) |
|