3806 | செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடிமேல் பொருநல் சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே (11) |
|