3809ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்?
மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே             (3)